ஊசிமுனை

நிலத்தை உழுது பலப்படுத்தும் கலப்பையாக/
நெஞ்சில் குடியிருக்கும் கடவுளை சிலையாக /
செதுக்கிடும் சிற்பிகளின் உளியின் முனையும்/
சரிகமபதநிச சரம் தொடுத்து இசைத்திடும் /
இசைக்கருவிகளை மீட்டச் செய்திடும் கோலுமாக/
இனிய காதலியின் அழுகை வர்ணித்து
எண்ணங்களை எழுத்தாக அமுது தமிழில் /
கவிதையாக ஒலையில் எழுதிடும் எழுத்தாணியின்/
முனை காதலை வளர்த்திடும் மூச்சு/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Jun-23, 6:30 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 43

மேலே