என்ன வாழ்க்கை இது

யார் என்ற கேள்வி, தினம்தோறும் நான் கேட்க
கூறாமல் என் மனமும் குமுறி அழுகிறது...

எதற்க்காக வந்தோமோ அந்த வேலை தெரியவில்லை
பிறருக்காக வாழ்வதுதான் பெரு வேலை ஆகிறது.....,

அன்புக்கும் வேலை இல்லை அறிவுக்கும் வேலை இல்லை
ஆண்டவனும் துணை இல்லை இந்த அனாதை மனுசனுக்கு ....,

நல்லது செஞ்சாலும், கெட்டது செஞ்சாலும், நாலு பெரு பேசுறது நியாயமுன்னு சொல்வாங்க,
அறியாமை உலகத்துல தினம் தினம் அல்லல்தான்...,

சொம்பு தூக்கிறவன் துதி பாட்டு பாடுறவன் சொர்க்க வாழ்கையாத சுலபமா அடைஞ்சிடுறன்...
நல்லா உழைக்கிறவன், நல்ல எண்ணம் இருக்கிறவன் நாயை போலதான் ஒதுங்கி கிடக்கிறான்......,,

நல்ல நிலமையைத்தான் நாள்தோறும் எதிர்பார்த்து நாட்கள் போனதுதான் நன் பார்த்த எதிர்காலம்....
உழைக்கும் வயசுலதான் ஒண்ணுமே கிடைக்காம ஒடஞ்ச சட்டி போல உடல் நசுங்கி போனேனே....

படிச்சா படிப்புக்கு, வேல இங்க இல்லையே, குடிக்க சொல்லித்தர ஒரு, கூட்டமே திரியுது இங்க.....
பணத்தை வச்சி தான் இங்க மனிசனையே மதிப்பிடுறான், குணத்தை வச்சிருந்த ஒரு குருவி கூட மதிக்காது.......

குடும்பம் குட்டியினி வரம் வாங்கி வந்திருப்ப. சிரமம் இல்லாம நகராது நம் வாழ்க்கை..,
வெறுத்து போய்டுவா வெறும் பையன் கோவிலுக்கு..
பொறுத்து இருந்தாலும் பொழுதுதான் பல போகும்.......,, உறவை, அறுத்து போய்டுட ஆள் இல்லா காட்டுக்கு என்ன வாழ்க்கை இது........,,,,,,,,,,,,,,,,,,?????

எழுதியவர் : த.மணிவண்ணன் எம் .சி.ஏ (13-Jun-23, 11:01 am)
சேர்த்தது : தமணிவண்ணன்
பார்வை : 91

மேலே