எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்

எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
×××××××××××××××××××××××××
எங்கெங்கோ சென்றேன் காற்றாக நான்
இங்கேதான் கலந்தாய் பூவாசமாக நீ
இங்கும் அங்கும் மனம் மாறியே
சங்கம் அமைக்க நாம் ஆனோம்

பிறந்தது உனக்காகத்தான் தோள்களும் சாய்ந்திடத்தான்
அறம் வாழ்க்கையும் அன்பும் உனக்காகத்தான்
புறம் தள்ளும் அறியாமையும் - உன்னோடுதான்
சிறந்த நல்லறமாக இல்லறமாக வாழத்தான்

வலது நீ இடது நான்
மலரும் நாம் வாடிடும் பிரிவினை
குலம் பெருகிட மஞ்சம் சேர்வோம்
நலம் வாழ செல்வம் சேர்த்திடுவோம்..

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Jun-23, 6:47 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 109

மேலே