காதல் பூவழகு

காதல் பூவழகு
●●●●●●●●

மஞ்சள் பூசிடும்
மாலை வேளையில் /
தென்றலின் இதமான
தழுவிட மொட்டுகள்/

மலர்ந்து விரியும்
மல்லிகைப் பூவழகியே /
முந்தானை விலகியதால்
மச்சமுள்ள இடையழகில்/

மயங்கிக் கன்னத்தில்
மையம் கொண்ட /
குழிகளில் புன்னகையால்
கவர்ந்து விழுந்து/

வானத்தின் இதயத்திற்க்குள்
வந்துவிடும் நிலவாக/
எந்தன் இதயத்தில்
எலியாகத் துளையிட்டு/

தூண்டில் சிக்கிய
திருக்கை மீனாக /
சிக்கித் தவிக்கிறேன்
சீர்படுத்த வந்துவிடு/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (13-Jun-23, 6:39 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 94

மேலே