கடன்

கடன்
×××××
தவளைப் பானையானுலும்
தவனை முறையில்
தேவையிருந்தால் வாங்கிடு
தேவையில்லா கடனின்றியே..

பவளத்தின் முத்தாக
கவர்ந்து இழுப்பினும்
சபலம் கொடுத்து
அவலம் கொடுக்குமே..

காட்டின் அட்டை
காலைப் பிடித்தால்
கட்டையாகும் வரை
குருதியை குடிக்குமே

கடன் அட்டை
கழுத்தை நெறித்து
கட்டையில் ஏற்றி
கரிக்கட்டை யாக்குமே

கடனின்றி வாழ்வதே
கடமையாகக் கொள்..

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்
பொதிகை மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (16-Jun-23, 5:40 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : kadan
பார்வை : 439

மேலே