உயிரே என்னோடு ஊடல் கொள்ளாதே 555

***உயிரே என்னோடு ஊடல் கொள்ளாதே 555 ***


என்னுயிரே...


நானும்
பைத்தியம் ஆகிறேன்...

உன் நினைவுகள் என்னில்
வரும் போதெல்லாம்...

என் வீட்டு தலையணையும்
என்னை தட்டி எழுப்புதடி...

நான் எப்போதும்
உன்னை நினைப்பேன்...

உன்னை நினைப்பது
எனது உரிமையடி...

நான் இறக்கும் நிமிடத்தில்
உன்னை மறவேனடி...

உன்னுடன் வாழ்ந்

நாட்கள் கனவாகி போகுமா...

மண்ணோடு காதல்
கொண்ட வெண்மேகமும்...

ஊடல்
கொண்டதோ மண்ணோடு...

தன்னை கருமேகமாய்
மாற்றிகொண்டு...

கண்ணீரை சிந்துதடி
மண்ணி
ன்மீது...

என்னோடு நீ
ஊடல் கொண்டால்...

என் இதயம் ரத்த
கண்ணீர் வடிக்குமடி...

உயிரில்
என் கலந்த உறவே...

நீ என்றும் என்னுடன்
ஊடல் கொள்ளாதே.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (17-Jun-23, 3:58 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 515

மேலே