தாய்மை எனும் தூய்மை - எண்சீர் ஆசிரிய விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா அரையடிக்கு)
தாய்மையெனுந் தூய்மையதன் தன்மை தன்னைத்
..தகவறிந்து நான்சொன்னேன் தங்கும் இன்பம்;
பாய்விரித்துப் படுத்தாலும் பாசம் மிக்க
..பண்புநிறைப் பாந்தமெனக் கதைசொல் வாரே!
ஆய்வரங்குந் தேவையில்லை அதனை இங்கே
..ஆன்றோர்முன் சொல்லிடவே அறிந்து கொள்வீர்;
நோய்வருமுன் காப்பதுடன் நோய றிந்து
..நொய்யதுயர் கொண்டுநம்மின் நோய்தீர்ப் பாரே!
- வ.க.கன்னியப்பன்