ஜீவ செல்வி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கவி

உங்களுக்கோ இன்று பிறந்த நாள்
எங்களுக்கு அது சிறந்த நாள்
இன்று பூக்கள் கவலை மறந்த நாள்

புன்னகை தன் கதவை திறந்த நாள்
பறவைகள் உயரம் பறந்த நாள்
மனமது துயரம் துறந்த நாள்

நீங்கள் கிளிஞ்சல் மேட்டில் பிறந்த கிளி
கூட்டில் பிறக்காது வீட்டில் பிறந்த தேன் துளி

உங்கள் பெயர் ஜீவ செல்வி
கடவுள் உங்களுக்கு கிள்ளிக் கொடுக்காது
அள்ளிக் கொடுத்தான் கல்வி

பிறருக்கு உதவி செய்வதில்
நீங்கள் மாரி
நீங்கள் மனித வடிவில்
உரு மாறி இந்த
மண்ணில் பிறந்த
ஒரு பெண்ணில்
பிறந்த கருமாரி

நீங்கள் காரை கரையில்
பிறந்து இருந்தாலும்
உங்கள் மனதில்
காரை கரை
இரண்டுமே இல்லை


தங்கத்தோடு இணையும்
காப்பர்
நீங்கள் EEE
படிப்பில் டாப்பர்
நீங்கள் அனைவரிடமும்
பழகும் பண்பு சூப்பர்

நீங்கள்
பாரதியார் கல்லூரியில்
படித்த பா ரதி
இப்போது குடும்பம்
எனும் தேரை வழிநடத்தும்
சாரதி

நீங்கள் ஊராண்டும்
இப்பாராண்டும்
நூறாண்டும் வாழ
அன்போடு வாழ்த்துகிறோம்

எழுதியவர் : குமார் (19-Jun-23, 3:57 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 251

மேலே