என்னை ஏன்டி சாகச் சொல்லற

என்னை ஏன்டி சாகச் சொல்லற?
---------------------------------------------------------
மாமியார்: (இ)ரண்டு வருசம் கழிச்சு வந்திருக்கிறேன். எம் பேரன் எங்கடி போயிட்டான்?
@@@@@@@
சாஹு, சாஹு
@@@@@@
(மாமியார் 'சாஹு' என்பதை 'சாகு' என்று புரிந்து கொண்டு): ஏன்டி எம் பேரன் எங்கேனு கேட்டேன். நான் குத்துக் கல்லாட்டம் இருக்கிறேன். என்னை எதுக்குடி சாகச் சொல்லறே?
(மாமியார் சொன்னதை காதில் வாங்காமல் மருமகள் மீண்டும், மீண்டும் "சாஹு, சாஹு" என்று தன் மகனைக் கூப்பிடுகிறார்)
@@@@@@@
ஏன்டி மருமகளே ஊரிலிருந்து வந்த மாமியாரை திரும்பத் திரும்பச் சாகச் சொல்லற. நான் என்ன மானங்கெட்டவளா? நீ என்னைச் சாகச் சொல்லறே? இருடி என்ற மகன் வரட்டும்.
@@@@@@@@@
ஐயோ அத்தை. உங்க பேரன் பேரு 'சாஹூ'. இந்திப் பேரு. நான் அவனை 'சாஹு'னு கூப்பிட்டேன். அது உங்க காதுல 'சாகு'னு கேட்டிருக்கும் அத்தை.
@@@@@@@
ஏன்டி மறுபடியும் 'சாகு'னு சொல்லற. இந்திப் பேருனா மட்டும் ' சாகு'னா பெத்த பிள்ளைக்கும் பேரு வைக்கிறது. அபசகுணம் பிடிச்ச பேரு. வேற பேரு கெடைக்கிலையா? வெக்கக் கேடுடீ.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sahu = Smart, Saint. Arabic origin, Masculine name.

எழுதியவர் : மலர் (20-Jun-23, 9:21 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 76

மேலே