யாருமில்லையே

எனை நம்பி வந்தவளே
என்னோடு வாழாம
என் இதயத்தை நோகடித்து
எமன் கொன்றதால
எனை பிரிந்து போனாயோ !

கண்ணில் காட்டிவிட்டு
கணத்தில் பறித்த அந்த
காலனின் செயல்
கடவுளுக்கு புரியலையா ?
கருணை காட்ட மாட்டாரோ !

என்னவளே, என் செல்லமே !
எங்கு போய் காண்பேன் உன்னை
நெஞ்சம் பதை,பதைக்க
நெடுநாளா புலம்புறேனே!
பயித்தியமா ஆனேனடி
பாவப்பட யாருமில்லையே !

எழுதியவர் : கோ. கணபதி. (22-Jun-23, 11:30 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : yaarumillaiyae
பார்வை : 47

மேலே