கண் தானம் செய்திடுக

சுவர் இருந்தால் தான்
சித்திரம் வரைய முடியும் !
இது பழமொழி !
விழி இருந்தால் தான்
அதை காண முடியும் !
இது புதுமொழி !
பார்வை இருப்பின்
பாரினை காணலாம் !
பார்வை அற்றவன்
பாதி மனிதனாகிறான் !
கருவில் உருவாகி
தருவாகி விருட்சமாகி
புவியில் மனிதராகி
மக்களில் ஒருவராகி
மண்ணில் வாழ்கிறான் !
உருவத்தில் நிறையை
உறுப்பில் குறையிருந்து
உலவுகின்ற மாந்தரை
மாற்றுத் திறனாளிகளை
மனங்கள் ஏற்பதில்லை !
அங்கங்கள் அனைத்தும்
தங்கங்கள் ஆனாலும்
விழியிருந்தும் வழியறியா
பழுதுள்ள பார்வையினால்
பரிதவிக்கும் உள்ளங்களை
காண்கின்ற வேளைகளில்
உள்ளத்தின் துடிப்புகள்
இருமடங்காக கூடுகிறது
கண்கள் கலங்குகிறது !
பார்வையிலா மனிதர்கள்
பாதையறியா இதயங்கள் !
வண்ணங்களை காணாத
வண்ணத்துப் பூச்சிகள் !
உயிருள்ள மனிதர்களே
உள்ளத்தில் கொள்ளுங்கள் !
தானத்தில் சிறந்ததென்பது
கண்தானம் ஒன்றேயென்பது !
உறுதியொன்று ஏற்றிடுவீர்
விழிதானம் செய்வதென்று !
மரணித்தும் வாழ்ந்திடுவோம்
மற்றவருக்கு வழங்குவதால் !
கண்தானம் செய்திடுவோம்
கண்ணில்லார் வாழ்த்திட !
உயிர்கள் சடலமாகும் பின்னே
எரித்து சாம்பலாகும் முன்னே
பதிவு செய்திடுக கண்தானம் !
விழியற்றோர் வழிகாண
வழியொன்று அமைந்திட
விழிதானம் செய்திடுவீர் !!!
பழனி குமார்
20.06.2023