பெண் எழுச்சி

பெண் எழுச்சி

பெண் என்று எண்ணாதே
பேதை என்று சொல்லாதே
போதை பொருளாய் கொள்ளாதே
பொறுமையை தூண்டி பார்க்காதே
தூய்மையாக உள்ளவளை
துச்சமாக தான் எண்ணி
தூரிகையும் இல்லாமல்
துகில் உரிக்க செய்வாயோ
கையில் சிலம்பெடுத்தாள்
கண்ணகியும் அன்று
கண்களில் கனலெடுப்பாள்
கன்னியும் இன்று
கன்னியாக கருணையோடு
இருப்பவளை காளியாக்கி
கடும் கோபம் கொள்ள வைத்தால்
காக்க முடியாமல் அழித்திடுவாள்
உதிரத்தை உணவாக்கி
உயிர் வளர்த்தோம்
உதிரத்தை வெளி எடுத்து
உயிர் மாய்க அஞ்சோம்

எழுதியவர் : கே என் ராம் (22-Jun-23, 8:30 pm)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : pen ezuchi
பார்வை : 26

மேலே