எதுகை எங்கே மோனை எங்கே - எழுசீர் ஆசிரிய விருத்தம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 6 காய்)
எதுகை எங்கே மோனை எங்கே
..இனிதி ருக்கும் கருத்தெங்கே?
உதவாப் பொருளும் ஒழுங்கி லாச்சீர்
..உவகை என்று மில்லையன்றோ!
புதுமை என்று சொல்லி விட்டுப்
..பொருத்த மில்லாப் பாட்டெதற்காம்?
கதிவே றுனக்கும் ஏது சொல்லக்
..கருத்தாய்க் கவனம் வேண்டுமன்றோ!
- வ.க.கன்னியப்பன்