மது ஓடும் வீதிகள்

மது ஓடும் வீதிகள்
×××××××××××××××××
குடி குடியை கெடுக்கும அச்சிலே
வடி முன்னேறு ஆள்வோர் ஆலையிலே
கோடி விற்பனை அரசின் நோக்கம் -போதையில்
மடி குடும்பத்திற்கு நிதி வேலை

தாலிக்குத் தங்கமில்லை தாலியறுக்க சாராயமுண்டு
காலிக்குடத்திற்கு தண்ணீரில்லை மதுவுக்கு பஞ்சமில்லை
வலிக்கு மருந்தில்லை போதைக்கு விருந்துண்டு
கூலிக்கு பணமில்லை ஊழலுக்கு குறைவில்லை

தேர் ஓடிய திருநாட்டு வீதிகளிலே
பார் திறக்க மது பாய்கிறது
ஊர்க்கு ஒரு பள்ளியென்ற நிலைமாறி
நகர்க்கு ஒரு மதுபானக் கடையானது

வள்ளல்களும் தர்மபிரபுக்களும் நிறைந்த தமிழ்நாடு
தள்ளாடும் போதைப் பிரியர்கள் மிகுந்த சுடுகாடுயானது
அள்ளல் பணத்தில் அரசு நடக்குது
துள்ளல் ஆட்டம் சாக்கடையில் நிகழுது

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (27-Jun-23, 11:30 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 44

மேலே