வீழ்ச்சி ஆசை வரவும் வீழ்ச்சி

  1. நேரிசை ஆசிரியப்பாக்கள்

    கண்ணியம் கடமை கட்டுப் பாடு
    என்ற கொள்கை வைத்த அண்ணா
    கண்ணிய மிலாது கண்ட மேனிக்கு
    ராஜாஜி யைவைதார் அவரில்
    லாப்போ பொதுமேடை யிலேத்தான் அன்றே

    கடமை என்றார் கட்சியாந் திராவிடர்
    கடமை என்ன வென்று கேட்க
    மடையன் சொல்லா தேயவன்
    மழுப்பியே மறைவதென் மடையர் கூட்டமே


    கட்டுப் பாடு என்று சொல்லியே
    சேர்த்தார் கழக ஆட்களை ஒருவர்
    கூட பண்பைக் கட்டுப் பாட்டுக்
    குள்ளே வைக்கார் ஆளுக் காளும்
    வைப்பாட் டியர்மேல் சொத்து
    வங்கி சேர்த்து தலைகுனிந் தாரே.

    கருணை வைத்தார் பேரில் பாவி
    கருணை வைக்கா மக்களை சுரண்டியே
    சுருட்டி னாரே கோடியில் கோடியும்
    நூறு வாரிசும் நூதனம்
    பாரு கோட்டீஸ் வர்களா மாமே

    பெருந்தன் மைபேச் சிற்கு கூட
    இடமில் லையே என்றும் மறப்போம்
    மன்னிப்போம் என்ற தெல்லாம் பொய்யே
    மரியாதை தெரியாப் மந்தை பன்றிகள்
    கற்றவர் திறமை காணா போக்கி
    மற்ற கைநாட்டை கல்வி
    மந்திரி யெனவு யர்த்து வானே

    பரோப காரம் என்ப தென்ன
    அண்டைய யலாரை ஆத ரித்தல்
    ஆங்கிலம் படியிந்தி ஆகா தென்பான்
    டெல்லி சென்று பாரா ளுமன்றம்
    எதிலும் பேசான் வெளிந டப்பு
    செய்வான் பேடி நாட்டை வளர
    நல்ல செய்யான் பொல்லா
    கார்ப ரேட்டின் கைக்கூலி ஆவானே

    பண்பு என்றால் பிறரிடம் பழகல்
    அன்பு காட்டான் கேலி பேசி
    கிண்டல் செய்வான் மெத்த கற்றான்
    போல நடிப்பான் நம்ப
    யாரையும் கழுத்தறுக் கும்பாவி அறிவாய்

    ஒற்றுமை திராவிடம் கன்னட துளுவும்
    சற்றும் வேறில்லை ஆந்திர மலையாளம்
    முற்றும் நாமே என்றழைத்
    திடபோடா போயெனத் திரும்பி னாரே

    நாணயம் மான முள்ள மாந்தர்
    நாநயப் பேச்சை நாணுவர் மாற்ற
    நானா சொன்னேன் நானில்லை என்று
    அக்கணமே மறுப்பன் கொள்ளை
    செய்து வீடு சேர்க்கும் பாவியரே

    பொறாமை என்பது ஒப்பீடு செய்து
    பிறர்போல் தம்மையும் சரிசெய் துவாழல்
    இவனோ ஆளை வைத்து இன்னல்
    தவறா செய்து அவர்குடி
    தரைமட் டம்செய் வன்பாவி தீயனே


    வீழ்ச்சி ஆசை வரவும் வீழ்ச்சி
    தாழ்ச்சி என்றதை யுணரான் பாவி
    ஆழ்ந்து நாட்டுடைமை ஆட்டை போட்டு
    கொள்ளுவன் கொள்ளுப் பேரன் பேத்திக்கு
    கோடிகள் கோடிகள் உயர்சொத்து
    சேர்த்து தீரா மோகமாய்த் திரிவானே




    நேரிசை வெண்பா

    அழகென நம்பி யதைசேர்த் திடாதே
    அழகாம் படமும் அரவும் -- பழகக்
    குழையும் கடிக்கக் குடிக்கு முயிரை
    விழைந்துநீ சேரா விடு




    ......

எழுதியவர் : பழனி ராஜன் (27-Jun-23, 3:34 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 50

மேலே