அன்னையே தெய்வம்
அன்னையே தெய்வம்
××××××××××××××××××××
படைத்தது பிரம்மன் என்பார்
பெற்றவள் தாயென்பதை மறந்தோர்
அடையாளம் காணதவனை ஆண்டவனென்பார்
அம்மாவின் தியாகத்தை நினையாதோர்
தாயின் தாலட்டை கேட்கதவன்
திருப்புகழ் திருவாசகம் அருமையென்பான்
கோயில் கோபுரம் கண்டால் கோடிப் புண்ணியமென்பான்
கோமணம் கூட தந்தைக்கு அணியத் தரதவன்
கருவறை தங்கத்தில் அம்மனுக்கு
கருப்பை சுமந்தவள் தெருவோரம்
கருங்கல்லுக்கு பால் பழ அபிசேகம்
கருணை வடிவான தாய் பட்டினி
செல்வத்தை உண்டியலில் கொட்டிடுவான்
செல்லாக்காசாக தாய் முதியோர் இல்லத்தில்
கல்லும மரமும் தெய்வமென்பான்
கடவுளை விட உயர்வானவள் அன்னையென அறியாதோர்
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்