மகள் அல்ல நீ மகா சரித்திரம்

கருவுக்குள் உயிராகி என் வெற்றிடத்தை நிரப்பினாய்...
வாழ்வின் அனைத்தும் கிடைக்கும்
உன் புன்னகை பூத்த முகத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது...
என் சோகங்கள் எல்லாம் சுகமாகும் உன் மழலையால்...
என் தோல்விகள் எல்லாம் வெற்றி ஆகும் உன் புன்னகையால்....
துவண்டு விழும் போதெல்லாம் என் சுமை தாங்கி நீ...
மகள் அல்ல நீ மகா சரித்திரம்..
என் வாழ்க்கை பக்கத்தை எழுதிய கவிதை நீ...
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்...
இந்த புதிரான உலகில் உனக்கான விடையை தேடி எடுப்பாய் என்று....

எழுதியவர் : நி.அர்ஷீ அல்ஜ் (8-Jul-23, 12:11 pm)
சேர்த்தது : நி அர்ஷீ அல்ஜ்
பார்வை : 58

மேலே