ஹைக்கூ விருந்து மற்றும் இளமை இனிமை புதுமை கருத்துரை
மதுரை முரளி* *பன்முக எழுத்தாளர்* மதுரை.
என் இனிய நண்பர் ஹைக்கூ இரா.இரவி அவர்களின் இரு புத்தகப் படைப்புகளும்
" ஹைக்கூ விருந்து" மற்றும்
"இளமை இனிமை புதுமை" கருத்துரை வழங்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி..🙏🙏. நண்பனின் புத்தகப் பயணம் விரைவில் அரைச் சதம் அடைய எல்லாம் வல்ல மதுரை மீனாட்சி சொக்கநாதரை வேண்டி வாழ்த்துகிறேன்..
வயதில்லாமல்!
1. முதல் புத்தகம் " *ஹைக்கூ விருந்து"* இதோ சில கவிதை கருத்துப்பதிவுகள் என் பார்வையில்...
1.மழையின் மகத்துவத்தை மனதிற்குள் பதித்தது..
" சோலைகள் சாலைகளாகின கேள்விக்குறியானது மழை..!"
முற்றிலும் வேதனையான உண்மை...👏👏
2. இயற்கையின் இரவு விளக்காய் மின்மினி ...கவிதை..👌 "மின்தடையில்லை ஒளிர்ந்தபடி மின்மினி...!"
3. "சுவரில் எழுதாதே! சுவர் முழுவதும் எழுதியிருந்தது..."
ஒர் நல்ல நகைச்சுவை உணர்வோடு கவிதைப்பதிவு...👏👏
4. "மரணித்தன மலர்கள்
மலர் வளையம்."
ஓர் சோகத்துக்குள்.. சோகம்..👌
5. "கோலத்தை விட கொள்ளையழகு கோலமிட்டவள். ரசனையோ ரசமே!!"
இப்படி ...இன்னும். இரசிப்பு கவிதைகள். இந்நூல் படைத்திட்ட என் இனிய நண்பருக்கு வாழ்த்துக்கள்
பல. பாராட்டுக்கள்
பலப்பல....👏👏👏
அடுத்ததாக... *இரண்டாவது* *புத்தகம்* .
" *இளமை இனிமை* *புதுமை* "
இதோ என் கருத்து பதிவுகள்...
1. நண்பரின்
தமிழ்க்காதல் எனக்கு ரொம்ப பிடித்தது...😇
"காதல் "
"நெடிலில் தொடங்கி மெய்யில் முடியும் மெய் காதல்!"
2. நாத்திகத்தில் ஆத்திகம்!..🤪
" சொர்க்கம் நரகம் நம்பாத நாத்திகன் நான் !
அவளைச் சந்தித்ததும் நம்பினேன் சொர்க்கத்தை."
3. வெற்றி தோல்வி எது சிறந்தது?..💐
"காதல் வெற்றியை விட
காதல் தோல்வி தான் கவிதை வளர்க்கின்றது."
4. புத்தரின் போதனையில் எனக்கு போதை இல்லை...🤪
"ஆசையை அறவே அழி"என்ற
புத்தர் போதனை பிடிக்கவில்லை. அதனால் புத்தரையும் பிடிக்கவில்லை!"
5. அடடா... ஓர் அழகு வர்ணனை...😇😍👍
என்னவள்!
" நடந்து வரும் நந்தவனம்!
நடமாடும் நயாகரா! மண்ணில் உள்ள சொர்க்கம் !
மாறாத நிரந்தர மார்கழி!
இப்படி... இன்னும். காதலை இரசமாய் ருசிக்க வைத்த என் இனிய நண்பருக்கு நன்றியும் , பாராட்டுகளும். அடுத்த வர இருக்கும் அவரது படைப்புகளுக்கு ஓர் *ரசிகனாய்* காத்திருக்கும்.
என்றும் நட்புடன்.
*மதுரை முரளி* பன்முக எழுத்தாளன்.