மறதிக் கொண்டவன் வாழ்வினில்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

புதுமை பிறக்கும் இடந்தானே இறைவன் இருக்கும் இருப்பிடமாம்
அதனைப் போற்றும் மனிதரெல்லாம் அவனின் சிறந்த பிள்ளைகளாம்
உதவும் எண்ணம் உடையோரை உயர்த்தி அழகுப் பார்ப்பவராம்
பதவி பணத்தை நிறையத் தந்து பகுமானம் பார்ப்பானாம் (க)

தரத்தால் குறைந்த மனிதரென இறைவன் எவரையும் படைப்பதில்லை
மரத்தைப் போன்ற பலபிரிவை மக்களுள் இறைவன் படைத்ததில்லை
வரத்தைக் கொடுத்து உயர்த்திட வழிவகையை அவனும் செய்ததில்லை
உரக்கவே சொல்லு கின்றேன் உயர்ந்தவர் என்பது பிறப்பிலில்லை (உ)

அறத்தை அறிந்து நடந்துக் கொண்டால் வம்புகள் வருவதில்லை
புறத்தை வைத்து மதிப்புச் செய்தால் மனிதனோ நாமில்லை
திறமையை நிறைய வளர்த்துக் கொண்டால் தீமையோ நமிக்கில்லை
மறதிக் கொண்டவன் வாழ்வினில் மகிழ்வு நீங்கி சென்றதில்லை (ங)

உணவைப் பணத்தால் பெற்றுமே உலகில் வாழ்வோர் பலகோடி
உணவை உயிரென எண்ணியே உற்பிப் பவர்களும் பலகோடி
உணவைத் தரகால் கைமாற்றி விற்பவர் பெறுவது பலகோடி
உணவை செய்பவன் உடுத்திக் கொள்ளவே இல்லையே ஒருகோடி (ச)

பொய்யே இன்று எல்லோ ருள்ளும் மகிழ்ச்சியாய் வாழுதய்யா
செய்யா ஒன்றை செய்ததாய் சொல்லியே அரசும் ஆளுதய்யா
பொய்யிது என்று கூறினால் புறமண்டை பிளக்க படுதைய்யா
மெய்யுடன் தலையும் இருத்தல் வேண்டின் பொய்யை மெய்யாக்குவோம் (ரு)
— நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (7-Jul-23, 12:04 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 48

மேலே