நீ நின்றால் அசைந்தால் நடந்தால் அழகு

வண்ணத்தமிழ் கவியெழுதிட அழகு
வானவில்லினிக் கோஎழுநிறம் அழகு
வண்ணமலரெ லாம்காற்றினில் ஆடவழகு
வளர்பிறையோ முழுமையில் அழகு
வஞ்சியேநீ
நின்றால் அசைந்தால் நடந்தால் அழகு
அழகிற் கெல்லாம் அழகுசெய்ய வந்தாயே

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jul-23, 9:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே