நோக்கு வர்மம்

கூர் விழிப் பார்வையால்
குறு குறுவென நோக்கும்
காளை யனனின் பார்வையில்
தீயென பற்றியது இதயம்....

கட்டுக்குள் ளடங்காத காதல்,
தீயாய் கரையுடைத்து பாய்ந்திட
கலங்கித் தவித்தேன் கண்ணாலனை
அடைந்திட வழி அறியாது....

வர்மம் பயின்ற வானவனோ,
விழியாலே நோகடிக்கும் நாதனே....

நோக்கியே நுண்ணுயிராய்
என்னுயிரை நசுக்கிய நாயகனெ....

நோக்கி யெனை விழியால்,
விதிர்க்க வைத்த விண்ணவனே....

வா யென்னருகில் வந்துவிடு
தா உனதன்பை தந்துவிடு
தாராளமாய்....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (8-Jul-23, 11:55 am)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 139

மேலே