இந்தியா

என் நாடு நல்ல நாடு
என பேசும் படி செய்வோம்
பூதம் ஐந்தும் வாழும் நாடு
புண்ணிய நாடு என் நாடு வாழ்ந்த மாந்தரை கடவுளாக்கி
வரலாறு காக்கும் என் நாடு
200 வருடம் என பிதற்றும் உலகை
2000 வருடம் முன் கண்ட நாடு என் நாடு


ஜாதி மத வேற்றுமை அளித்து
சமத்துவம் பரவச் செய்வதே என் கடமை அனைத்து உணர்வுக்கும் மதிப்பளித்து அன்பை பெருக்குவதோ அவரவர் உரிமை
அறிவுகொள்ள புத்தகம் ஆயுத மெனக் கொடுத்து டாலர் போரில் வெல்வதே நம் திறமை
என் நாடு நல்ல நாடு
என பேசும்படி செய்வோம்
திருத்தம் இருந்தால் திருத்துங்கள்
பிடித்தால் புன்னகிங்கள் இத்துடன் என் வணக்கங்கள்

எழுதியவர் : அருண் குமார் (9-Jul-23, 10:33 am)
சேர்த்தது : arun
Tanglish : indiaa
பார்வை : 61

மேலே