ஒரு முறையே வாழ்வு
ஒரு முறையே வாழ்வு
×××××××××××××××××××
ஏழையைக் கண்டால் ஏற்றம் செய்திடுவே
மழை நீராக மாறுபட்டு உதவிடு
உழைத்திடும் அடியோரின் உயர்வை தந்திடு
கீழையுள்ள வறுமைக் கோட்டினரை மேலேற்றிடு
காசும் துட்டும் கடமையின் எதிரி
நேசம் காட்டியே நேயம் கொண்டிடு
தேசம் உணர்வின் தேயாது வளர்த்திடு
ரோசம் இல்லாது ரவுத்திரம் பழகு
புன்னகை முகத்தோடு பகிர்ந்திடு நன்கொடை
முன்பகைத் தந்திடும் முன்கோபம் தவிர்
வன்முறை தவிர்த்து வருடல் தொடங்கு
சான்றோராக இறத்தலே சிறந்திடும் பிறப்புமே...
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்