கண்ணீர் சிந்தும் நினைவுகள்

கண்ணீர் சிந்தும் நினைவுகள்
×××××××××××××××××××××××××××
பார்த்தேன் ஓரக் கண்ணால் உமையவளை
ரசித்தேன் அவள் கண்சிமிட்டும் ராகத்தை
பிடித்தேன் என்னவள் பறக்கும் முத்தத்தை
விசுவாசித்தேன் பாசம் காட்டும் பண்பினை

வெள்ளைத் தாவனியில் தேவதையாக வந்தவள்
வெள்ளிச் சிலையாக என்னர்கே நின்றாள்
வெள்ளந்தியாக உதட்டைக் கூட்டி முத்தச்சாடையில்
வெண்மை மனதை திறந்தே 143யென்றாள்

கடல்நீர் மேகமாகக் கற்பனையில் மிதந்தேன்
மடல் எழுதி மழைநீரில் தூதுவிட்டு
உடல் ஆவி உயிரெல்லாம் அவளிடமே
நாடல் கொண்டேன் நானல் நீரானாளே

வேலை நிமித்தம் மறுயிடம் சென்ற
வேளையில் மறந்த உமையாள் ஊமையானாள்
துளையிட்டு குடியிருந்த இதயத்தை நூறாக்கி
தொலைவில் மணமாகி தொலைத்தே சென்றாள்..

காலங்கல் கடந்தும் கல்வெட்டாக ஒலிக்கிறது
உதடுகள் காதலித்த அவளின் பெயரைக் ..
கண்ணீர் சிந்தும் நினைவுகளாக ஒளிரும்
கல்லரை கண்டாலும் அதன்மீது உமையவளென்றே..

"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (12-Jul-23, 5:06 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 43

மேலே