அதனினும் நன்று
பெரும் செல்வந்தரென்று
பலமுறை அவரிடம் சென்று
பசி போக்கக் கையேந்தினேன்
பிச்சை போட வேண்டினேன்
பார்த்து சினம் கொண்டு
போடா நாயே ! என்றார்
வயிற்று பசியால்
வாய் திறந்தேன் மறுபடியும்
ஒடித்த மரக் குச்சியால்
ஓங்கி அடித்து
உடலைக் காயப்படுத்தி
விரட்டி விட்டார்
உள்ளம் நோக திட்டி
ஒன்றும் தராமல்
விரட்டிய பெரியவரை
வாழும் நாள் முழுதும்
நான் அவரை பார்க்காமலிருக்க
நீ தான் உதவனும் கடவுளே !
இரக்கமில்லாதவரிடம்
இருக்கும் பணம், பண்பைவிட
இல்லாமலிருப்பதே நன்று,
அவமதிப்பவரின்
அருகில் போகாமல் தூரவிலகுவதே
அதனினும் நன்று