காமராஜர் பிறந்த தின கவிதை
#காமராஜர்* பிறந்த தினத்திற்காக ஒரு கவிதை *படித்து மகிழுங்கள்* முடிந்தால் *கருத்து பகிருங்கள்....*
⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️
*காலத்தை வென்ற*
*காமராசர்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️
கல்விதான்
எல்லோருக்கும்
கண் கொடுக்கும்...
ஆனால்
அந்தக் கல்விக்கே
கண் கொடுத்தது
நீங்கள் தான் ஐயா...!
வீட்டுகாகவே வாழும்
அரசியல்வாதிகளுக்கு
மத்தியில்.......
நாட்டுக்காக வாழ்ந்த
அரசியல்வாதிகளின்
பட்டியலில்
முதலிடம் பிடித்தது
நீங்கள் தான் ஐயா !
கல்லாதவர் முகத்தில்
இருப்பது
கண்கள் அல்ல .....
புண்கள் என்றான்
வள்ளுவன் ....
ஏழைகளைக் கற்க வைத்து
புண்களை
கண்களாக்கிய பெருமை
உங்களையே சாரும்.....!
கற்றவர் முகத்தில்
இருப்பது கண்கள்
என்பதைவிட ....
காமராஜர் என்பதே
சாலச்சிறந்தது....!
கற்பது நல்லது
பிச்சை எடுத்தாவது
கற்க வேண்டும் என்று
சொல்வார்கள்....
ஆனால்
ஏழைப்பிள்ளைகள்
கற்பதற்கு
நான்
பிச்சையெடுக்கவும்
தயார் என்று சொன்னது
நீங்கள்
மட்டும்தான் ஐயா!
நீங்கள் மட்டும்தான்...!
இன்று....
படித்தும பலர்
பேதையாக
இருக்கும் போது...
படிக்காமலேயே
நீங்கள்
மேதையானது
எப்படி ஐயா....?
பள்ளிக்கூடம் சென்று
படிக்காத
உங்களைப் பற்றி தான்....
இன்று
எல்லாப் பள்ளிக்கூடங்களும்
படித்துக் கொண்டிருக்கிறது...!
"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா" என்று எல்லோரும்
சொல்லித்தான் காட்டினார்கள்... ஆனால்
நீங்கள் மட்டும் தான்
"வாழ்ந்தே காட்டினீர்கள் ஐயா....!"
"பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்
படிப்பு எப்படி வரும்?" என்று....
மதிய உணவைக் கொடுத்து கல்வியைக் கொடுத்த
உங்கள் மதிக்கு ஈடு
இவ்வுலகில் ஏதுமில்லை....!
ஆள்பாதி ஆடைபாதி என்ற
பழமொழி......
ஐயா !
உங்களிடம்
தோற்றுத்தான் போனது....
"மரியாதை என்பது
ஆடையில் இல்லை
உள்ள ஓடையில்
இருக்கிறது " என்று
சொல்லாமல் சொன்னது
நீங்கள் மட்டும்தான்....!
தன்னுடைய தாயாக இருந்தாலும்
பொதுக்குழாயில் தான்
தண்ணீர்
பிடிக்க வேண்டும் என்று சொன்னதிலிருந்து.....
சட்டம் கூட
தங்களிடமிருந்து தான்
கடமையைச் செய்ய
கற்றுக்கொண்டது என்பது
நன்றாகப் புரிகிறது....!
நீங்கள்
எழுப்பிய
தொழிற்சாலைகலால்தான்....
இன்னும்
என் நாடு
நடுத்தெருவுக்கு வராமல்
இருக்கிறது
இன்னும் கொஞ்சம்
மானத்தோடு......!
நீங்கள் மட்டும்
அணைகள்
கட்டாமல் போயிருந்தால்...
நம் நாட்டில்
விவசாயக் காடுகளெல்லாம்
நீரின்றி
சுடுகாடக மாறியிருக்கும்...
நம் நாட்டு
ஏழை மக்களின்
குரள்வளைகளெல்லாம்
தாகத்தால் தவித்திருக்கும்...
ஆம் ஐயா!
உங்களுக்குப் பிறகு
ஒர் அணைகள்
கூடக் கட்டவே இல்லையே....!
நாட்டையே வீடாக்கி
நாட்டு மக்களையே
குடும்பமாக்கி
வாழ்ந்த
உங்கள் மனம்
பிரபஞ்சத்தைக் காட்டிலும்
பெரியது தான் ஐயா!
"கடமையைச் செய்
பலனை
எதிர்பார்க்காதே" என்று
சொன்ன கிருஷ்ணரே!
அதை
கடைபிடித்தாரோ என்னவோ..?
ஆனால்
நீங்கள்தான்
கடைபிடித்தீர்கள்....!
நிறத்தில்
கருப்பாக இருந்தாலும்.... வெண்மையான
வாழ்க்கையை வாழ்ந்து
நிறத்தில்
ஏதுமில்லை என்பதை
நிரூபித்து விட்டீர்கள் ஐயா!
சாக்கடையில்
விழுந்தாலும்
ஒருவன்
முயற்சி செய்தால்....
அதை பூக்கடையாக
மாற்றி விடலாம் என்பதை
உலகுக்கு
நீங்கள் தான்
புரிய வைத்தீர்கள்....
பறவைகள்
மரத்தில் வாழும்
வாழ்க்கையை
உங்களால் எப்படி ஐயா
மண்ணில் வாழ முடிந்தது? இன்றுவரை
அது தான்...
புரியாத புதிராகவே
இருந்து வருகிறது...!
அரசியல் ஆளுமை என்று
கேள்வி பட்டு
இருக்கிறோம்...
ஆனால்
அந்த ஆளுமையை
உங்களுடைய
வாழ்க்கை வரலாறறில் தான்
நிசமாகக் கண்டோம்....!
பலர் வாழும் போதே
இறந்து விடுகின்றனர் ...
ஆனால்
நீங்கள்தான்
இறந்தப் பின்னும்
எங்கள் மனதில்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்....
வாழ்க உங்கள் புகழ் !
வளர்க உங்கள் பெருமை !
*கவிதை ரசிகன் குமரேசன்*
⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️