காகிதக் கப்பல்

காகிதக் கப்பல்
"""""""""""""""""""""""""""""

வான்விழி நீர்
வழிந்தோடும் வீதியில்/

வண்ணமிகு நட்போடு
வாண்டுகள் இரண்டு/

வழியோடும் நீரில்
விளையாடி மகிழ்வுடன்/

வீணானக் காகிதத்தில்
வேடிக்கையாக கப்பல்/

வடிவமைத்து நீரில்
விடவே மிதந்து/

வளைந்தோடும் தண்ணீரில்
விந்தையாகச் சென்றிட /

வியப்பின் ஆனந்தம்
விழியில் தெரியும்/

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (15-Jul-23, 6:02 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : kaakithak kappal
பார்வை : 45

மேலே