விருதுநகரின் விருது

விருதுநகர் மைந்தன்
நம் காமராஜர்
படிக்காத மேதை
எல்லாரையும் படிக்க
வைத்த பாதை
எளிமையில் வலிமை
வாய்ந்த தலைவர்
பொறுமையில் சிகரம்
தொட்ட முதல்வர்
தேசத்தின் தந்தை
நேசத்தின் விந்தை
கதர் சட்டை
நாயகன் வெள்ளை
வேட்டி தாயகன்
ஏழை மக்களின்
மா மன்னன்
தோளை கொடுக்கும்
மேதை அரசன்
நிமிர்ந்து நிற்கும்
தமிழ் புதல்வன்
உலகம் போற்றும்
மா மனிதர்
இமயம் ஏற்றும்
தேச மகான்!

எழுதியவர் : இதயவன் (15-Jul-23, 4:24 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 27

மேலே