தலைக்கவசம்
தலைக்கவசம் உயிர்
கவசம் என்பார்கள்
உயிர் காப்பான்
தோழன் என்றும்
உதவி செய்வான்
நண்பன் என்றும்
சொல்லலாம் வாழலாம்
பயணத்தின் பாதுகாவலன்
நண்பா போகும்
தூரம் முக்கியமில்லை
போடும் கவசம்
முக்கியம் உனக்கு
வாழும் வாழ்க்கை
எதுவரை அதுவரை
கொண்டுபோகும் தலைக்கவசம்
உந்தன் குடும்பம்
மண்ணின் வசம்
நீயாக இருந்தால்
தலையின் வசம்
கவசமாகும் கண்ணை
இமை காத்தால்
உன்னை நான்
காப்பேன் என்று
கவசம் சொன்னது
போனவர்களை வரச்சொல்ல
முடியாது உலகில்
வந்தவரை வாழ
வைப்போம் உயிரில்
முடிந்தவரை கவசம்
போடு தலையில்
முடிந்தபின் கிரீடம்
போட்டு என்னப்பயன்!