வாழத்தெரிந்தவன்

பாச வலை!!
💜💜💜💜💜

தானே பின்னும் வலையுள்
தன்னையே அடைத்துக் கொள்கிறார்கள்!

தன்னை நேசிப்வர்களின்
வலையினையும் அறுத்துத்
தனது வலையினுள்ளே
அடைத்திட முயல்கிறார்கள் !

சிலர் தட்டுத்தடுமாறி தப்பித்துச் சென்று
வேறோர் வலையில்
விழுந்து தொலைகிறார்கள் !

பல பேர் பல வலைகளுக்குள் அகப்பட்டுப்
பரிதாபமாக விழிக்கிறார்கள்!

தனக்கான வலையினை
அறுபடாமல் பார்த்துக் கொள்பவன்
வாழத்தெரிந்தவன்!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (19-Jul-23, 8:23 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 36

மேலே