சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் -6
சங்கரநாராயணர் கோவில் தல வரலாறு எளிய கவிதை நடையில் -6
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பட்டத்து யானை தரையைப் பெயர்த்தல்
{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{{}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}
தாயக இருந்து வாழ்வளிக்கும் அம்மனை
தரிசிக்க விரதமிருந்து உப்பில்லாமல் உணவருந்தி
சித்திரையில் நித்திரையின்றி முழு நிலவொளி வீசிடும்
சிறப்பான நன்நாளில் பூசித்துப் பலன் பெற
உக்கிரன்கோட்டையில் இருந்து பாண்டிய மாமன்னர்
உக்கிரப் பாண்டியன் பட்டத்து யானையின்
சிம்மாசனத்தில் சிம்மாக ஏறி அமர்ந்து
சொக்கர் மீனாட்சியை வழிபட மதுரைக்கு பயணிக்க
பெருங்கோட்டூர்யெனும் ஊரில் இடையில் இளைப்பாறி
பேரூரில் அருள்புரியும் காவல் தெய்வம்
திருக்கோட்டி அய்யனாரின் இறையருள் பெறவே
திருக்கொவிலுக்குல் சென்று தொழுதிட்டு திரும்பையில்
புன்னைவனக் புற்றில் ருத்ரன் லிங்கமாக
புலப்பட்டதை உணர்ந்த பட்டத்து யானை
பாண்டியனுக்கு உணர்த்தவே ஆலைச் சங்கொலியாக
பெரும் சத்தமாகப் பீறிட்டு
தும்பிக்கை ஊன்றி கால் மடித்து
தென்றல் புயலாக வீசிட சாய்ந்திடும்
பனையாக
வெண்கொற்றக் கால் ஒடிந்து விழுந்தது
வானத்தைக் கிழித்திடும் இடியுடன் மின்னலாக
பெரியக் கொம்பினால் பூமியைப் பிளந்து
பட்டத்து யானைத் தரையில் புரண்டதை
பாண்டிய மாமன்னர் கண்டிட்டு கண்கலங்கித் திகைத்த
போது காவற்பறையன் பரபரப்பாக வந்தவன்
புன்னைவனத்தில் நடந்ததைச் சொல்ல
படையுடன் சென்றான் லிங்கத்தினை தரிசிக்க......
சங்கரநாராயணர் வரலாறு கவிதையாக தொடரும் .......
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

