எதைக்கண்டு ஏமாந்தனை தமிழா
நேரிசை ஆசிரியப்பா
வடவன் ஆள தெற்கன் வீழ்ந்தான்
திடமாய் தமிழும் வாழ்ந்திடா வழியதின்
மடையை மறித்தது வடவன் என்றாய்
நீயெதை படைத்தனை தமிழதை உயத்திட
வடவனும் பிராமணன் அனைவரும் எதிரி
கடமை ஆற்றவும் விடாரே என்றாய்
தீம்பவர் உனக்கவர் இழைத்த தென்ன
தமிழரின் இலக்கியம் உரைத்ததோ அவர்பிழை
தமிழ ரல்லார் சொல்லை நம்புவையோ
தெளிவிலா தெளிதமி ழனேயேது செய்தனை
ஒளித்தாய் பக்தியுடன் தமிழை மூட
களிப்பாய் சேர்த்தனை திராவிட சிந்தனை
உதவாக் கொள்ளையர் திராவிடர் அறிந்திலை
அண்ணா பெரியார் கலைஞர் மரபில்
காவியம் செய்தாரா காப்பியம் படைத்தாரா
உனையும் உயரவிடா தடுத்ததார்
சாமான்ய திராவிடர் இன்றைநிலை எய்துவையோ
....