திருவாசகம் ஓதி திருவடி சேரு
திருவாசகம் ஓதி திருவடி சேரு
*******
நல்லவை கொண்டு நாராசந் தொலைத்து
அல்லவை யொதுக்கி ஆதரவு பெருக்கு ;
சொல்லிடச் சுவைக்கும் சுந்தரவா சகத்தைச்
சொல்லியேக் கயிலைச் சொக்கனடி அமரு !
*****
சுந்தர வாசகம் = அழகிய திருவாசகம்
சொக்கனடி அமரு = சிவபெருமான் திருவடி
அடைதல்
( கலிவிருத்தம்)
வாய்ப்பாடு = கூவிளம் மா காய் புளிமா