புறநானூறு நானாடி
புறநானூறு நானாடி
××××××××××××××××××
காஞ்சிபுரச் சேலை
கட்டி சோலைப்
பக்கம் கூடுகட்டும்
பசுங்கிளியாக வந்தவளே..
திருக்கை வால்
சவுக்காக கண்ணால்
சுழற்றி அடித்தே
சுண்டு விரல்
மோதிரமாக்க நினைப்பவளே
மதயானையான மாமனை
உதட்டழகில்
மதி மயங்கச் செய்பவளே
இதயத்தைக் கொடுத்தேயென்
இளமையைக் கேட்பவளே..
பழுக்காத முருங்கையென்னை
பழமாக்கத் துடிப்பவளே
வழுவான மலையென்னை
வடிவழகால் உடைப்பவளே
புடிச்சாலும் நீ புடிக்க
புளியங்கொம்பாக மாட்டனேடி
படிச்சாலும் குறையாதப்
புறநானூறு நானடி..
" யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்