நண்பன்

சிறு கசப்பும் இனிப்புமான
ஏலம் இஞ்சி தேயிலை
வாசம் நிறைந்த தேனீர்...

தெவிட்டாத தேன் சுவையில்
தெளிவாக்கும் நம் மனதை
தென்றலாய் வந்த தேனீர்....

புண்பட்ட நம் மனதை
ஆற்றவும் தேற்றவும் வல்ல
மருந்தாக பணிபுரியும் தேனீர்....

இல்லத் தரசியின் இனிமை
நிறைந்த ஒரே நண்பன்
அவளின் இடைவேளை தேனீரே!!!!


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (27-Jul-23, 6:31 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : nanban
பார்வை : 128

மேலே