தியானம்

தியானம்

திக்கற்று நிலைதடுமாறி
திகைத்த எந்தன் மனம்
திசை மாறிய படகாய்
தொலை தூரத்தில்....

கரை சேர
வழி அறியாது
கலங்கியது மனம்
விழிமூடி ஆழ்ந்து
சிந்தித்தேன்.....

அமைதியில் அமிழ்ந்து
ஆனந்தம் பரவியது
மனதில், தடையகற்றி
கரை சேர்ந்தேன்.....

ஆழ்மனதின் அமைதியில்
பிரவாகம் எடுக்கும்
ஆனந்தமே தியானத்தின்
முதன்மை படி.....

எழுதியவர் : கவிபாரதீ (28-Jul-23, 7:28 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : thiyanam
பார்வை : 126

மேலே