அம்மா-குழந்தைஅன்பை அளத்தல்

l
அம்மா உனக்கு என்மேல் எவ்வளவு ஆசை என்று
தன்னைக் கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் அம்மாவைக்
கேட்டது குழந்தை அந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத
அன்னை சொன்னாள் சொல்லத் தெரியலையேடி கண்ணே;
என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் நீசொல்லேன் என்க
தயங்காமல் சொன்னாள் குழந்தை இந்த வானளவு என்றே
கள்ளமில்லா மனம் சொல்லும் சத்திய வாக்கு இதுவல்லவா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (10-Aug-23, 8:11 pm)
பார்வை : 58

மேலே