தாயின்றி ஏதுமில்லை
தாயின்றி ஏதுமில்லை
××××××××××××××××××××
பத்து திங்கள்
வயிற்யில் சுமந்தவள்
மற்ற மாதங்களில்
மடியில் கிடத்தியவள்
உழைத்திடும் தாயால்
உயர்ந்திடும் சேய்
புவியாகச் சுழன்று
வானாக காத்திடுவாள்
பூவாக மலர்ந்தவள்
மாலையாகக் குடும்பமாக்கியவள்
நீராக உருமாறி
உறவுமுறை பலவானவள்
காற்றாகப் பறந்தே
விசுவாச உறவுக்குச்
சுவாசமாகக் கரையும்
கற்பூரமானவள் அன்னை
இல்லறத்தை நல்லறமாக்க
நத்தையாகத் துடிப்பவள்
கலங்கரை விளக்காக
கரை சேர்ப்பவள்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்