மச்சக்காரி மருகுக்காரி

இந்தியாவில் உள்ள பிரபல நாளிதழ்களில்
வெளியான விளம்பரம்:

புதுமுக நடிகைகள் தேவை:

தமிழைத் தாய்மொழியாகக் பேசுவோர் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

சிவப்பு நிறமான அழகான பெண்கள் விண்ணப்பிக்கவும். உயரம் ஐந்தரை அடி.

பதிவு செய்யப்பட்ட படத்தலைப்பு: 'மச்சக்காரி மருகுக்காரி'. ஆயிரம் கோடி செலவில் தயாரிக்கப்படும் படம்.
எனவே முகத்தில் மருகு அல்லது மச்சம் உள்ள அழகான பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். முகத்தில் மருகு, மச்சம் இரண்டும் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

எல்லா வகை நடனங்களையும் அறிந்திருக்க வேண்டும்.
இரண்டு கதாநாயகிகள் கதை என்பதால் விண்ணப்பவர்களில் இருவர் கதாநாயகிகளாக நடிக்கத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பிற அழகான மச்சம், மருகு உள்ள அழகான பெண்களுக்கு அவர்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் பெண்கள் அவர்களது முழுவிவரத்துடன் ஐந்து நிமிடம் ஓடக்கூடிய தங்களது ஒளிப்படத்தை (வீடியோ) கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு பத்து நாட்களுக்குள் அனுப்பி வைக்கவும்.

எழுதியவர் : (16-Aug-23, 3:06 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 53

மேலே