அ முதல் ஒள வரை
குறள் வெண்பா
அணுவிலும் ஆற்றல் அதிகம் நிறைந்த
தணலில் குளிராம் தமிழ். (க)
ஆதவன் தோன்ற லடுத்தப் பிறப்பது
மாதவப் பைந்த மிழே. (உ)
இனிமையும் இன்பம் இயக்கமும் கொண்ட
தனிமை மொழியாம் தமிழ் (ங)
ஈன்றவள் இல்லாள் இறைவன் இவர்களுள்
மேன்மை மொழியாம் தமிழ் (ச)
உணர்வை மிகுதியாய் கொள்ளத் தமிழை
உணவாய் புசித்தல் பலம் (ரு)
ஊக்கம் ஒழுக்கம் இயக்கம் இவையுடன்
ஆக்கம் தருமே தமிழ் (சா)
எண்ணும் எழுத்தும் ஒளியும் ஒலியும்
பண்பும் தருமே தமிழ் (எ)
ஏற்றமும் கண்டிட ஞாலநூல் யாவையும்
மாற்றித் தமிழிலே செய் (அ)
ஐந்தொழுக் கத்துடன் மேன்மையை தந்திடும்
பைந்தமிழ் கற்றல் வளம் (கூ)
ஒவ்வொரு ஒன்றையும் ஒன்றியே காத்திடும்
தவ்வைத் தமிழைப் பேண் (ய0)
ஓடங்கள் ஆழியில் ஓடிட ஆதியில்
தேடிய யாவும் தமிழ் (கக)
ஒளதா பயணஞ் செயினும் அவர்கள்
தமிழுக்கு ஈடா குமோ
— நன்னாடன்.
(ஒளதா - யானை மேற்பீடம்)