வரதட்சணை

வரதட்சணை

பசுமைப் பொங்கும் விவசாயப் பூமியான
மேலக்கலங்கலில் ராசுக்குட்டி என்ற விவசாயி மகள் காவேரி
காவேரி நிறமும் சிரிப்பும் கோதுமை மணி போல்
காவேரி நீராக பணத்தை இறைத்து
கல்லூரியில் முதுநிலை வரைப் படிக்க வைத்தான்
அரசு பள்ளிகளில் 8 லட்சம் கொடுத்தால் 25,000 ரூபாய் சம்பளத்தில் பணி என
வெள்ளை வேட்டி அரசியல் தரகர் சொல்ல
ராசுக்குட்டியோ எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை இந்த வேலையை காவேரிக்கு வாங்கி கொடுங்கள் என்றான் .
அவளைப் படிக்க வைப்பதில் பண மெல்லாம் செலவானது, கையில் பணமில்லை வீட்டில் தங்கமில்லை கடன் வாங்க
சிந்தித்தான் பொன்விளையும் பூமியை பெண்ணின் நலனுக்காக விற்க துணிந்தான் 7 ஏக்கர் இடத்தை விற்று பணத்தை வாங்கிக் கொண்டு .
வெள்ளை வேட்டி அரசியல் தரகரிடம்
பணம் 8 லட்சத்தை கொடுக்கச் சென்றார் .
தரகர் வா ராசுக்குட்டி பணம் கொண்டு வந்திருக்கிய என்று முடியில்லாத மழங்கிய மீசையை தடவிக் கொண்டு கேட்டார் உடனே ராசுக்குட்டிப் பணம் தயார்.
அப்படியானால் பணத்தை கொடுத்திடு நாளை நீயும் உன் பொண்ணும் நாளை மாலை தென்காசிக்கு சென்று தொடர்வண்டியில் சென்னை செல்வோம் அங்கு பார்க்க வேண்டியத பார்த்து தயார் பண்ணிடுவோம்
வேலை கிடைத்த மாறிதான் கவலைப்படமாப் போங்க நாளை வாங்க என்று அரசியல்வாதி சொல்ல வீடு கிளம்பியுவன்.
மறுநாள் கிழக்கே போகும் தொடர்வண்டியில் பயணித்து சென்னையில் பார்க்க வேண்டியவர் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டு ஊர் திரும்பினார் ராசுக்குட்டி.
காலமும் கடந்தது அரசியல்வாதி வீட்டுக்கு நடந்து செருப்பும் தேய்ந்து கொண்டிருந்தது வேலை நாளை என்று சொல்லி அரசியல் வாதியும் நாட்களை கடத்தினான் .
பெண் இருக்கும் இடத்தில் பூ வைத்து பார்க்க மாப்பிள்ளை வீட்டாரும் வந்தனர்
காவேரி படிப்பும் அழகும் எளிமையான குணமும் மாப்பிள்ளை செல்வராஜ்க்கும் அவர் வீட்டாருக்கும் பிடித்தது.
செல்வராஜ் அம்மா வாய் திறந்தார், ஐயா உங்கபொண்ண அனைவருக்கும் பிடிச்சிருக்கு மேல்க் கொண்டு பேசுவதைப் பேசுவோம்
எங்களுக்கு ஒரே மகன்தான் கடலளவு படித்து கையளவு சம்பளம் வாங்குறான்
தங்கமாக 70 சவரன் ரொக்கப் பணம் 2 லட்சம் ஒரு கார் இவ்வளவுதான்
இதெல்லாம் எனக்கு இல்லை
உங்க பொண்ணு வசதிய எங்க வீட்டில் வாழ்வதற்கு என்று சொல்லி முடிக்க..
ராசுக்குட்டியோ கண்ணீர் மல்க அவ்வளவு எண்ணிடம் இல்லைமா பெண்ணுக்கு அரசாங்கம் உத்தியம் வாங்கி தரத்தான் முடியும் நீங்க கேட்கிறது நான் இப்ப இருக்கிற சூழலில் ..என்று தயங்க..
பெண்ணு எளிமையினு சொன்னாங்க பெண் பார்க்க வந்தோம்
ஏழ்மையினு சொன்ன உங்க வீட்டு படி ஏறிருக்க மாட்டோம் என்று சொல்லி மாப்பிள்ளை வீட்டார் கிளம்பினார் ..
அரசியல்வாதியிடம் வேலையை பற்றி
கேட்க சென்றான் வழக்கம் போல் நாளை என்றான்
ராசுக்குட்டியோ எகிறி பேசினான்
அவனோ இதெல்லாம் அரசியலில் சாதாரணம் என்று சொல்ல
இருக்கிற பணத்தை இவரிடம் கொடுத்து ஏமாந்து விட்டோமே என்று கண்கலங்கினார்.
அரசியல் வாதி பணமும் தரவில்லை
மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் படிப்பை பார்க்க வில்லை
பணம் மட்டுமே குறிக்கோளாகக் வந்து சென்றனர்
காலங்கள் கடந்தன முதிர்கன்னியாகக் காவேரி ...

நிரந்தரமானப் படிப்பை விட
நிரந்தரமற்றப் பணம் பெரியது என்று நினைக்கும் ஆண் மகனைப் பெற்ற பெண்கள் திருந்தினால் மட்டுமே வரதட்சணை ஒழிந்து பெண்மை ஒளிரும்

என்றும் சமூக நலனில்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (18-Aug-23, 5:48 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : varathatchanai
பார்வை : 134

சிறந்த கவிதைகள்

மேலே