மௌனம் போதுமே
அன்பே உன்னை ஆசையோடு
காண வரும் நேரத்தில்
"மௌனத்தில்" நீ நிற்க
நானும் ஏக்கம் கொண்டு
உன்னையே "மௌனமாக"
பார்த்து நிற்கிறேன்
"மௌன' மொழியில்
காதலை பேசி மகிழ்வது சுகமே
ஆனால்...இந்த சுகத்தை
புரிந்துக் கொள்ள இயலாதவர்கள்
நம்மைப் பார்த்து பைத்தியங்கள்
என்று கைகொட்டி சிரிக்கிறார்கள்
அன்பே "மௌனம்" போதுமே
"மௌனத்தை" கலைத்துவிட்டு
மனம் திறந்து பேசுவோம் வா...!!
--கோவை சுபா