சோகம்
சொட்டுச் சொட்டாய் சோகம்
சொல்லாமல் வந்து சேரும்
பெற்றெடுத்த மகவே பெற்றயெனை
மகவுபோல் காக்கும் நேரம்....
இமைகள் சோர்ந்து இடுங்கும்
கரைந்து கரைந்தே மறுகும்
மாற்றம் அதனை காணமனம்
நோகாமல் நொந்து சாகும்....
காத்திருப்பு தொடரும், எந்நேரம்
காலன் கைகோர்ப்பான் என்று
நிமிடங்கள் கரைந்திட மனமேங்கும் கங்கையில் கரைவதெப்போ என்று....
கவிபாரதீ ✍️