கணநேரம்

ஒருகணம்
நினைத்துப்பார்த்து திரும்பும் முன்
அத்தனையும் மாறியிருந்தது.
என்னைத் தவிற
சகலத்தாரும்
அவளை மறந்திருந்தார்கள்
சகஜ நிலைக்குத்
திரும்பியிருந்தார்கள்.
காலங்கள் கடந்தும்
நான்‌மட்டுமே
பைத்தியமாகியிருக்கிறேன்.

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (28-Aug-23, 8:08 pm)
பார்வை : 87

மேலே