மாறிப்போன வாழ்க்கையில் மாறாதது வறுமையே
மாறிப்போன வாழ்க்கையில் மாறாதது வறுமையே
++++++++++++++++++++++++
கோடிப் பணம்
தேடியேக் கொடுப்பர்/
கேடியாயினும் அயலகம்
ஓடிடும் கயவர்க்கு/(2)
உழுதிடும் இயந்திரம்
உழவர் வாங்கியே /
வீழ நேர்ந்தால்
மாள்வான் ஏழையுமே /(4)
வல்லாண்மை மிகர்
வறுமை மிக்கவரை/
உயர்மைக்கு அடையா
வண்ணம் தடையாவார்/(6)
தலா வருவாயுள்
நிலா சென்றே/
உலா வந்தே
அலாதிஇன்ப மடையாதிருப்பினும்(8)
மானிடம் உருவாகி
பல்லாயிரம் ஆண்டாகி/
வட்டமிட்டு அதனுள்
சிட்டாகயடை படுவோருமுளர்/(10)
பஞ்சும் பசியும்
படைத்தவன் சதியல்லா/
பழகு உழைத்திட
பாதையுண்டு உயர்ந்திட/(12)
அறியாமை விலக்கிடு
அரியாசனம் ஏறிடலாம்/
ஒற்றிவளரும் மூங்கிலாக
ஒற்றுமையோடு வாழ்ந்திடுவோம்/(14)
மாறிப்போகும் வாழ்க்கையில்
மாறிடுமே அனைத்துமே/(15)
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
#சமத்துவ_புறா_ஞான_அ_பாக்யராஜ்