நாற்காலிகள் திருட்டு
ஏன்டா நம்ம தலைவர் வர்ற கூட்டத்துக்கு பத்தாயிரம் பேரைக் கூட்டிட்டு வரச்சொல்லி தலைக்கு ஐநூறு, ஆளுக்கொரு பிரியாணி பொட்டலம் கொடுக்கச் சொன்னோம். என்ன ஆச்சு? மேடைக்கு முன்னாடி ஒரு நாற்காலியும் இல்லை வாடகைத் தொண்டர்களையும் காணோம். என்னடா நடந்தது.
@@@@@@@@
ஐயா பத்தாயிரம் பேரு வந்தாங்க. பணத்தையும் பிரியாணி பொட்டலங்களையும் முன்னாடியே கொடுத்துட்டேன். வந்தவங்க பிரியாணியைத் தின்னுட்டு ஆளுக்கொரு நாற்காலியில் தூக்கிட்டு ஓடிப்போயிட்டாங்க ஐயா.
@@@@@@@@@
ஐயோ, ஐயோ. என் சொந்தம் பணமும் போச்சு. திருட்டு போன நாற்காலிகளுக்கு பணம் கட்டணும். தலைவர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்தா என் பதவியும் போச்சு.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆளில்லாக் கட்சிக்கு வாடகைத் தொண்டர்கள்