தேவதை

நீண்ட நாட்களுக்கு பின்பு ஒரு காதல் கதை.. இல்லை இல்லை ஒரு கான்வர்சேசன் நல்ல இருந்த என்ஜய் இல்லைனா 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️

“தேவதையோடு”
ஹலோ !!
ஹலோ!!!
எங்க இருக்க?
வீட்டுல ஆமா நீங்க?
ஹேய் பிசாசு நான்தான்
எப்பட வந்தே நல்ல இருக்கையா?
ஹீம் பைன் .. லாஸ்ட்வீக் வந்தேன்..
என்ன சார் திடீர்ன்னு போன்னெல்லாம் செய்றீங்க ? எங்க ஞாபகமெல்லாம் இருக்கா..

சின்ன புன்னகையோடு சும்மதான் உன் ஏரியலதான் சின்ன வேலை வந்தேன் அதான்..
ஓஹோ ..
Freeயா இருக்கையா மீட் பண்ணலாம?
இல்லை பிஸி
ஓ அப்ப ஒகே சரி தம்பி என்ன செய்றான் அப்பா? அம்மா?
எல்லோரும் நலம்
ம்ம்ம்
அப்புறம்?
சும்மாதான் சரி பாய் கால் யூ லேட்டர்.

வண்டி முன்னோக்கி ஏதே நினைத்துக்கொண்டே நகர்ந்தது அடுத்த போன் ரிங் அலற..

எங்கடா இருக்க?
இதோ ஹாஸ்பிட்டல் பக்கத்துல

சரி பொருமையாவே வா ஒன்னும் அவசரம் இல்லையென்றால் தங்கை.. அடுத்த 5நிமிடத்தில் ஆஸ்பித்திரி வாசலில் நின்று கை அசைக்க வந்து காரில் அமர்ந்தாள்

ஏன்டா லேட்டு அம்மா நீ 11மணிக்கே கிளம்பிட்டேன்னு சொன்னாங்க எங்க ஊர் சுத்த போன என்ற கேள்வி கனைகள் காதை துளைக்க…
வழி நெடுக காட்டு மல்லி… என அலற FM சப்ததை கூட்டி அவள் வாயிக்கு பூட்டு போட்டேன்.. காற்றில் அருகே நடக்கும் பெண்ணின் கூந்தல் முகத்தில் பறந்து தடவுவது போல் மழைத்துளிகள் காரை கண்ணாடியை தொட வீடும் வந்ததும் .. நாளைக்கும் ஆஸ்பத்தரி போகனும் என்றால் ஹீம் சரி..
காலையில ஆஸ்பித்திரில விட்டுட்டு சரி முடிஞ்சதும் கூப்புடுன்னு சொல்லிட்டு வெளிய போயி குடிகாரன் சரக்கு பாட்டலை தேடுற மாதிரி மொபைலை தேட ஒரு வழியாக தட்டு தடுமாறி கிடச்சுது..
ட்ரீங் ..ட்ரீங்
எங்க இருக்க?
பஸ்ஸடாப்ல?
எங்க போற ?
காந்திபுரம்?
எதற்கு?
பாரக்கு பார்க்க?
சரி ஒரு ஒருமணி நேரம் பரக்கு பாரு வந்துடுறேன்..
வேணாம்..
இல்லை வந்துட்டு கூப்பிடுறேன. கட் செய்துட்டு எக்ஸ்லேட்ர்ட அமுக்க மின்னல் வேகத்தில் கார் முன்னாடி ஒரு பைக்🥹 2நிமிடம் என்னை நானே ஆசுவாசப்படுத்தி கொண்டு நகர்ந்தேன் இல்லை இல்லை மிதந்தேன் அவளை பார்க்க மிதந்து போனது என் கார்கள்.
ஐ எம் ரீச்சிட்?
நில்லு நான் இன்டர்வீயூல இருக்கேன் ?
ஆல் த பெஸ்ட் பூங்குத்து (ஈமோஜி வேற) முடிச்சுட்டு கூப்பிடு .
சில மணித்துளிகளில் போன் ரீங்காரம் இட ஓபன் செய்து பார்ததும் வயித்தில் பட்டம்பூச்சி பறந்தோடியது, எடுத்தேன்..

எங்கடா இருக்கே ?
இதோ இங்கதான் டவுன் பஸ்டாண்ட்கிட்ட
சரி கிராஸ்கட் ரோட்டுக்கு வா?
அங்க எங்க? சென்னை சில்கிட்ட நில்லு வரேன்..
போலீஸ் ட்ராபிக் ரூல்ஸ் எல்லாத்தையும் உடைத்துவிட்டு போயி கூப்பிட்டா நான் முன்னாடி வந்துடேன் நீ ஏன்டா அங்க போன லூசாடா நீ?
யாரு நானு லூசா ?
திரும்பி வாடா
இது ஒன் வே.. நீ வா..
சரி வரேன் வை..
மகாவீர் வந்துட்டேன்
ராமரஜ் காட்டன் அடுத்த சென்னை சில்க் தாண்டி வா என சொல்லிட்டு கண்ணாடியில் முகம் பார்த்தேன் ச்சை சேவ் செஞ்சுருக்கலாமோ 🤔🤔 இல்லை அழகாதான்டா இருக்கே 😃என்று சிரித்து கொண்டே இருக்க எங்கடா இருக்க எருமை? என்றது போனீல்
நீ எங்க? சென்னை சில்க்க தண்டி நிற்கறேன் .
பவிழம் ஜீவல்லரியை தாண்டி ரைட் கட்ல வா..
அங்க என்னடா செய்ற?
ஒரு குட்டிபிசாசுக்கு வெயிட் பன்றேன்
சுடுகட்டுக்கு போய் பாரு கிடைக்கும்
சரி வா சேர்ந்து போகலாம்
நில்லுடா வந்து மிதிக்கறேன்.. கட்ல வந்துட்டேன்..
தண்ணீலாரிக்கு பின்னாடி கார் நிற்குது பாரு .. நான் பாத்துட்டேன் வா நேரா
வந்தவள் கதவை திறக்க போட்ட AC கூட ஹீட்டரா மாறிட புன்னகைத்தாள் இப்ப ஜன்னி வந்த மாதிரி குளிர்ந்தது உடம்பு.. கையை நீட்டி எப்படி இருக்க? நல்ல இருக்கேன் ..

பசிக்குது எங்காவது சாப்பிட போலாமா என்றேன் .. போக போக என் விரல்களில் நடுவில் அவளின் விரல்கள் இருக்கமாய் கைகளை பற்றிகொண்டாள்
நம்பிக்கையோட கண்களை பார்த்து சிரித்துவிட்டு முடி நிரச்சுடுச்சு என்றால் ..
நமக்கு வயசு ஆகிட்ச்சில்ல என்றேன் ..
சில நிமிட அமைதிக்கு பின்பு கருத்துட்ட என்றேன் ?
நான் எப்பட வெள்ளையா இருந்தேன்னு சொல்லி தலையில தட்ட ..
சரி எங்க போக?
இப்படியே போயிடலாமா?
எதுவரைக்கும்?
உதடுகளை பிதுக்கி உசுரு போறவரைக்கும் என்றால்..
ஹீம் போலமே.. அப்படியே அவினாசி ரோட்டுல பயனமானது வண்டி.. சைலன்ஸ் நிலவ, இளையராஜ மட்டும் பாடிக்கொண்டே இருந்தார்.. எங்கள் கைகளும் இறுக்கமடைந்து AC யிலும் வேர்த்து இருந்தது ..
அப்ப அப்ப கைகள் பிரிந்து தலையை வருடிவிட்டு மீண்டு கரம் சேரும்
ஹோப்காலேஜ்ல யு டேர்ன் போட வேண்டாம் வேண்டாம் அடுத்து என்றால் சித்தராக்கு முன்னாடி யுடேர்ன் போட்டு வண்டி காந்திபுரத்தை நோக்கி மீண்டும் நகர்ந்தது.. பழைய கதைகளோட நினைவுகளோட இளையராஜவும் சேர்ந்து மிதந்து போனது. புலியகுளம் ஆனந்தாஸ்ல சாப்பிடலாம்னா பார்க்கீங் இல்லைனதும் எப்பாடி கிளம்புடா,
என்னை எங்க வூட்டுல மாட்ட வெச்சுடதே என்று பத்து வருசத்துக்கு முன்னாடி சொன்ன அதே ரைமீங்ல சொல்ல அந்த அழகில் பசி பறந்தது.. முட்டி மோதி women’s பலிடெக்னிக் சைட்ல பார்கீங் போட்டு முகத்தை உற்று பார்த்தேன் விரல்கள் இன்னும் இறுக்கம் அடைந்தது .. உன்னை பார்த்துக்கோ மறந்துடதே என்றாவள்..
கண்கள் குளமானது அடக்கி கொண்டாள் என் கண்களை தவிர்த்துகொண்டள்.. கைகளை பார்த்துட்டே பஸ்ஸடாண்ட் வந்துடுச்சுல்ல என்றாள்.. போன் கத்தியது

டேய் முடிஞ்சுது வா.. பசிக்குது எனக்கு என்றால்
சரி வரேன் 5நிமிட் என்று மீண்டும் அவள் கண்களை பார்க்க முயற்சித்தேன் ..
வலையில் மாட்டிய மீண்களை போல் தவிதவித்தது.. பொட்டென்று ஒரு சொட்டு கண்ணீர்.. அந்த பஸ்ஸடாப்ல இறக்கி விடு என்றால்..

அந்த 100அடிக்குள்
ஐ லவ்யுடா ..
ஐ மிஸ்யுடா..
சிக்னலில் கதவை திறந்தவள் கைகளை விடவில்லை திரும்பி கைகளில் முத்தமிட்டு புன்னகைத்துவிட்டு இறங்கிவிட்டாள் அந்த தேவதை…

எழுதியவர் : ஷிபா தௌபீக் (30-Aug-23, 5:08 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : thevathai
பார்வை : 540

மேலே