கவிதைக்கு நீயழகு
கவிதைக்கு நீயழகு
×××××××××××××××××
செடிகளுக்கு மொட்டழகு
பூத்தபின் பெண்ணழகு
தோடிராகப் பாட்டழகு
தேடிவரும் காதலழகு
மேகத்திற்குக் கருப்பழகு
மழையானால் வெண்மையழகு
மோகத்திற்கு மங்கையழகு
தீர்ந்தபின் தாயழகு
மின்னலுக்கு ஒளியழகு
ஒலியானால் இடியழகு
இன்னலுக்கு முத்தமழகு
சிவந்துவிட்டால் இன்பமழகு
புல்லுக்குப் பனியழகு
பொழிந்தால் குளிரழகு
இல்லத்திற்கு மனைவியழகு
தொட்டிலுக்குப் பிள்ளையழகு
தமிழக்கு எழுத்தழகு
ஏட்டுக்கு பாழகு
கவிதைக்கு நீயழகு
கலந்துவிட்டால் நானழகு
#யாதும்_ஊரே_யாவரும்_கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்