சனாதனம்

'சனாதன' என்பது ஓர் வடமொழிச்சொல்
முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள்
என்பதே இதன் உட்பொருள் ஆகும்
அதாவது பரப்பிரம்மம் என்றே கருதலாம்

'சனாதனத்தை அழிப்பது என்பது அறி
இறைவனையே அழிக்க முயல்பவது ஆகும்
இரணியன் முயன்றான் அழிந்தான் பசுமாசுரன்
கதியும் அதுவே புராணம் நவில்கிறது

சனாதன தர்மம் இறைவன் வகுத்த வழி
அதை முறையாய் அறிந்திட்டால் உயர்வு தாழ்வு
மனிதனே உண்டாக்கியது நிச்சயம் புரியும் சநதனம் நம்மைக்காக்கும் சந்தேகம் இல்லை

அன்று பிரகலாதனை இரணியனிடம் இருந்து
காத்தோன் இன்றும் வீணரிடமிருந்து நம்மைக்
காத்து தர்மத்தை நிலைநிறுத்துவார்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Sep-23, 8:33 pm)
பார்வை : 73

மேலே