கோலம் போடும் பெண்குயிலே
கோலம் போடும் பெண்குயிலே
------------ -------------- ---------------
புத்தம் புது காலையில் தலைமுழுகி/
மஞ்சள் முகத்துடன் மாஞ்சோலை சேலைகட்டி
உன்தலை முடியில் பனித்துகள் மிதந்திருக்க
அன்ன நடைபோட்டு குனிந்து நீ
போட்ட கோலந்தனை கதிரவன் காண
கன்னியவள் போட்ட தாமரைக் பூக்கோளம் /
கதிரவன் தாமரை என காதல்செய்ய /
துயில் எழுந்து அன்புகதிர் வீசினானோ /